‘மூன்று முடிச்சு சீரியல்’ நடிகை தற்கொலை - முன்னாள் காதலனால் தொல்லை!! முன்னாள் காதலனின் தொடர் தொல்லையால் 5 பக்க கடிதம் எழுதி வைத்துவிட்டு, பிரபல இந்தி சின்னத்திரை நடிகை வைஷாலி டக்கர் தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மத்தியப் பிரதேச மாநிலம் உஜ்ஜைன் மாவட்டம் மஹித்பூரைச் சேர்ந்தவர் வைஷாலி டக்கர். கடந்த 2015-ம் ஆண்டு ஒளிபரப்பப்பட்ட ‘Yeh Rishta Kya Kehlata Hai’ சீரியலில் சஞ்சனா சிங் என்ற கதாபாத்திரத்தின் மூலம், சின்னத்திரையில் அறிமுகமான வைஷாலி டக்கர், பின்னர் பல்வேறு தொடர்களில் நடித்து வந்தார். அதன்பிறகு, கடந்த 2010-ம் ஆண்டு முதல், 2018-ம் ஆண்டு வரை கலர்ஸ் சேனலில் ஒளிபரப்பான ‘Sasural Simar Ka’ என்ற தொடரில், சீமா மற்றும் பிரேமின் மகளாக அஞ்சலி கதாபாத்திரத்தில் நடித்ததன் வாயிலாக மிகவும் பிரபலமடைந்தார். இந்தத் தொடர் இந்தியில் வரவேற்புப் பெற்ற நிலையில், தமிழில் தனியார் சேனலில் ‘மூன்று முடிச்சு’ என்றப் பெயரில் வெளியாகி இங்கும் நல்ல வரவேற்பைப் பெற்றது. அதன்பிறகு ‘சூப்பர் சிஸ்டர்ஸ்’ உள்பட பல சீரியல்களில் நடித்து பிரப...