சென்னையில் தொடங்கியது முதலீட்டாளர்கள் மாநாடு! 60 ஒப்பந்தங்கள் கையெழுத்து! தமிழக அரசின் மாஸ் திட்டம் சென்னை: தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் முதலீட்டாளர்கள் மாநாடு தொடங்கியுள்ளது 60 ஒப்பந்தகள் கையெழுத்தாக உள்ளது. தமிழ்நாட்டில் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு அமைந்த பின், அந்நிய முதலீடுகளை ஈர்க்க பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதற்காக சர்வதேச முதலீடுகள் ஈர்க்கும் வகையில் அரசு முறை பயணமாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஐக்கிய அமீரகம் பயணம் மேற்கொண்டார். அப்போது உலக எக்ஸ்போ கண்காட்சியில் தமிழ்நாட்டின் உட்கட்டமைப்பு உட்பட பல்வேறு துறைகளைக் காட்சிப்படுத்தும் வகையில் அமைக்கப்பட்டு இருந்த அரங்கையும் முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார். முதல்வரின் அந்த பயணத்தில் பல்வேறு முதலீடுகளை ஈர்க்கும் வகையில் பல ஒப்பந்தங்கள் போடப்பட்டன. சுமார் ரூ.5 ஆயிரம் கோடிக்கும் அதிக முதலீடுகள் ஈர்க்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து விரைவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் லண்டன் செல்ல உள்ளதாக கூறப்படுகிறது. இதனிடையே தொழில் செய்ய ஏதுவான மாநிலங்கள் பட்டியலில் தமிழ்நாடு பெரும் முன்ன...