குழப்பமே வேண்டாம்! 10 நிமிடத்தில் என்னவெல்லாம் கிடைக்கும்..!! ஆன்லைன் உணவு விநியோக நிறுவனமான Zomato ஒரு புதிய சலுகையை அறிவித்துள்ளது, அதில் உணவு உங்கள் வீட்டிற்கு 10 நிமிடங்களில் வந்து சேரும் என கூறப்பட்டுள்ளது. இந்த சிறப்பு சலுகையை Zomato Insta என நிறுவனம் பெயரிட்டுள்ளது. நிறுவனம் அடுத்த மாதம் முதல் இந்த சேவையை தொடங்க உள்ளது. Zomatoவின் இந்த அறிவிப்புக்குப் பிறகு ஏராளமான வாடிக்கையாளர்கள் இது குறித்து பல கேள்விகளை எழுப்பியுள்ளனர். இந்தச் சேவையினால் டெலிவரி வழங்கும் நபருக்கு நெருக்குதல் அதிகமாகும் என சமூக வலைதளங்களில் தொடர்ந்து கேள்விகள் எழுப்பப்பட்டு வருகின்றன. இந்நிலையில், Zomato நிறுவன தலைவர் தீபிந்தர் கோயல், குழப்பங்களை தீர்க்கும் வகையில், 10 நிமிடங்களில் உணவு விநியோக சேவை எவ்வாறு செயல்படும் என விளக்கம் அளித்துள்ளார். தேர்ந்தெடுக்கப்பட்ட உணவுகள் மட்டுமே 10 நிமிடங்களுக்கு கிடைக்கும் என்று தலைமை நிர்வாக அதிகாரி தீபிந்தர் கோயல் தெளிவுபடுத்தினார். இந்தச் சேவையின் கீழ், அருகிலுள்ள இடங்கள் மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட உணவுப் பொருட்கள் மட்டுமே கிடைக்கு...