குழப்பமே வேண்டாம்! 10 நிமிடத்தில் என்னவெல்லாம் கிடைக்கும்..!!


குழப்பமே வேண்டாம்! 10 நிமிடத்தில் என்னவெல்லாம் கிடைக்கும்..!!


ஆன்லைன் உணவு விநியோக நிறுவனமான Zomato ஒரு புதிய சலுகையை  அறிவித்துள்ளது, அதில் உணவு உங்கள் வீட்டிற்கு 10 நிமிடங்களில் வந்து சேரும் என கூறப்பட்டுள்ளது. இந்த சிறப்பு சலுகையை Zomato Insta என நிறுவனம் பெயரிட்டுள்ளது. நிறுவனம் அடுத்த மாதம் முதல் இந்த சேவையை தொடங்க உள்ளது. 

Zomatoவின் இந்த அறிவிப்புக்குப் பிறகு ஏராளமான வாடிக்கையாளர்கள்  இது குறித்து பல கேள்விகளை எழுப்பியுள்ளனர்.  இந்தச் சேவையினால் டெலிவரி வழங்கும் நபருக்கு நெருக்குதல் அதிகமாகும் என சமூக வலைதளங்களில் தொடர்ந்து கேள்விகள் எழுப்பப்பட்டு வருகின்றன. இந்நிலையில், Zomato நிறுவன தலைவர் தீபிந்தர் கோயல், குழப்பங்களை தீர்க்கும் வகையில், 10 நிமிடங்களில் உணவு விநியோக சேவை எவ்வாறு செயல்படும் என விளக்கம் அளித்துள்ளார்.

தேர்ந்தெடுக்கப்பட்ட  உணவுகள் மட்டுமே 10 நிமிடங்களுக்கு கிடைக்கும் என்று தலைமை நிர்வாக அதிகாரி தீபிந்தர் கோயல் தெளிவுபடுத்தினார். இந்தச் சேவையின் கீழ், அருகிலுள்ள இடங்கள் மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட உணவுப் பொருட்கள் மட்டுமே கிடைக்கும். எங்கள் 10 நிமிட சேவையின் கீழ் பயனர்கள் பிரட் ஆம்லெட், போஹா, காபி, டீ, பிரியாணி, மோமோஸ், மேகி போன்ற உணவுகளை ஆர்டர் செய்யலாம் என்று கோல் கூறினார். வெறும் 10 நிமிடங்களில் உணவை அளிக்கும் வகையில் புதிய உணவு நிலையங்களை தயார் செய்து வருகிறோம் என்றார்.

 

முன்னதாக, Zomato நிறுவனர் தீபிந்தர் கோயல், 10 நிமிடங்களில் Zomato மூலம் உணவு விநியோகம் விரைவில் தொடங்கும் என்று ட்வீட் செய்தார். இதில் உணவின் தரம் – 10/10, டெலிவரி செய்யும் நபரின் பாதுகாப்பு – 10/10 மற்றும் டெலிவரி நேரம் – 10 நிமிடங்கள் என அவர் கூறியிருந்தார்.

இன்றைய தொழில்நுட்பத் துறையில் நிலைத்திருக்க, புதுமைகளை அறிமுகப்படுத்துவது, தொடர்ந்து முன்னேறுவதும் முக்கியம் என அவர் கூறினார். அதனால்தான் 10 நிமிடங்களில் உணவை டெலிவரி செய்ய Zomato இன்ஸ்டன்ட் கொண்டு வருகிறோம்.

தீபிந்தர் கோயல் கூறுகையில், விரைவான உணவு விநியோகத்தின் வாக்குறுதியானது, தேவைப்படும் வாடிக்கையாளர்களுக்கு அருகாமையில் அமைந்துள்ள ஃபினிஷிங் ஸ்டேஷன்களின் நெட்வொர்க்கைப் பொறுத்தது. இதற்காக டெலிவரி செய்யும் நபர் மீது எந்த அழுத்தமும் கொடுக்கப்படாது எனவும் அவர் உறுதி படுத்தினார்.

மேலும் தாமதமாக டெலிவரி செய்வதற்கு நாங்கள் எந்த அபராதமும் விதிக்க மாட்டோம் எனவும்,  டெலிவரி பார்ட்னர்களுக்கு சாலைப் பாதுகாப்பு குறித்து நாங்கள் தொடர்ந்து அறிவுறுத்தி வருகிறோம் என்பதோடும்,  விபத்து மற்றும் ஆயுள் காப்பீட்டையும் வழங்குகிறோம் என அவர் தெளிபடுத்தினார்.

Comments

Popular posts from this blog