ஐம்புலன்,வெங்காயம் படங்களில் நடித்த காமெடி நடிகர் மரணம்!


ஐம்புலன்,வெங்காயம் படங்களில் நடித்த காமெடி நடிகர் மரணம்!


3 அடி உயரம் கொண்ட இவர் ஐம்புலன் நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அருகே உள்ள, அல்லி நாயக்கன்பாளையம் பகுதியை சேர்ந்தவர் தனசேகரன் என்கிற லிட்டில் ஜான்.  சில திரைப்படங்களில் நகைச்சுவை நடிகராக நடித்துள்ளார். 3 அடி உயரம் கொண்ட இவர் ஐம்புலன்,வெங்காயம் உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களில் காமெடி நடிகராக நடித்தாலும், கிராமங்கள் தோறும் கோவில் திருவிழாக்களில் நடக்கும் கலை நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்வதை வழக்கமாக கொண்டவர். நேற்று இரவு பள்ளிபாளையம் அருகே உள்ள மோடமங்கலம் கிராமத்தில் மாரியம்மன் பண்டிகை முன்னிட்டு நடைபெற்ற கலை நிகழ்ச்சியில் கலந்துகொண்டு விட்டு வந்து தனது வீட்டில் தூங்கியவர் மீண்டும் எழுந்திருக்கவில்லை.

உறவினர்கள் சென்று பார்த்த பொழுது மூக்கிலும், வாயிலும் ரத்தம் வந்த நிலையில் இருந்ததால், அருகில் உள்ள மருத்துவமனைக்குக் கொண்டு சென்று பரிசோதனை செய்தபோது, அவர் மாரடைப்பால் உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

 

Comments

Popular posts from this blog

PAVILIA Plush Sherpa Blanket Throw #Plush

Genius Elf on the Shelf idea to get your kids to donate their toys

Microwave Peanut Brittle