7 வயது சிறிய நடிகரை திருமணம் செய்தது ஏன்?: பிரபல நடிகை விளக்கம்


7 வயது சிறிய நடிகரை திருமணம் செய்தது ஏன்?: பிரபல நடிகை விளக்கம்


பிரபல பாலிவுட் நடிகையானஅர்ச்சனா பூரன் சிங்நடிகர் பர்மீத் சேத்தியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அவரை விட பர்மீத் 7 வயது சிறியவர். இந்நிலையில் வயது வித்தியாசம் பற்றி அர்ச்சனா கூறியிருப்பதாவது,

நான் பர்மீத்தை 1992ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டேன். முன்னதாக நான்கு ஆண்டுகள் காதலித்தோம். வயது வித்தியாசம் பற்றி பேசியபோதும் அது எங்களுக்கு பெரிய விஷயமாக தெரியவில்லை. ஒருவர் மீது மற்றொரு வைத்திருக்கும் அன்பு அதிகமாக இருந்ததால் திருமணம் செய்து கொண்டோம்.

அண்மைச் செய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்

எங்கள் குடும்பத்தாருக்கு அந்த வயது வித்தியாசம் பெரிதாக தெரிந்தது. உன்னை விட சிறியவரை திருமணம் செய்யும் முன்பு ஒன்றுக்கு இரண்டு முறை யோசி என்று என் குடும்பத்தார் தெரிவித்தார்கள். ஆனால் நான் தெளிவாக இருந்தேன்.

எங்களுக்கு திருமணமாகி 30 ஆண்டுகள் ஆகிவிட்டது. இரண்டு மகன்கள் இருக்கிறார்கள். வாழ்க்கையில் பல விஷயங்களை ஒன்றாக கடந்து வந்திருக்கிறோம். வயதை பற்றி நினைத்ததே இல்லை என்றார்.

தி கபில் சர்மா ஷோவில் சிறப்பு விருந்தினராக இருக்கிறார் அர்ச்சனா. அடுத்ததாக India’s Laughter Champion நிகழ்ச்சியில் நடுவராகப் போகிறார்.
பி.எம்.டபுள்யூ காரை அடுத்து சர்ச்சை நடிகைக்கு துபாயில் வீடு வாங்கிக் கொடுத்த காதலர்

Comments

Popular posts from this blog