‘அங்கிள் அஸ்வின்’ - ரவி சாஸ்திரியின் கிண்டல் கலந்த பாராட்டு‘


‘அங்கிள் அஸ்வின்’ - ரவி சாஸ்திரியின் கிண்டல் கலந்த பாராட்டு‘


அங்கிள் அஸ்வின் நல்ல மனநிலையில் இருக்கிறார் என்று இந்திய முன்னாள் தலைமைப் பயிற்சியாளர் ரவி சாஸ்திரிசென்னைசூப்பர் கிங்ஸை நொறுக்கிய ரவிச்சந்திரன் அஸ்வினை லேசான நட்பார்ந்த கலாய்த்தலுடன் புகழ்ந்தார்.

சிஎஸ்கே அணிக்கு எதிராக அஸ்வின் அன்று 23 பந்துகளில் 40 ரன்கள் விளாசி ராஜஸ்தான் ராயல்ஸின் பிளே ஆஃப் சுற்று தகுதியை உறுதி செய்தார். தன் முன்னாள் உரிமையாளருக்கு எதிராக அஸ்வின் ஒரு பழிவாங்கும் இன்னிங்ஸாக ஆடி வெற்றிக்கு அருகில் வந்தவுடன் தன் மார்பையே குத்திக்காட்டி வெறியை வெளிப்படுத்தினார்.

இந்த ஐபிஎல் 2022 தொடரில் அவர் 10 இன்னிங்ஸ்களில் 183 ரன்களை 146.40 என்ற ஸ்ட்ரைக் ரேட்டில் எடுத்துள்ளார். 2017 முதல் 2021 வரை ரவி சாஸ்திரி அஸ்வினுடன் நெருக்கமாக பணியாற்றியுள்ளார். சிட்னி ட்ராவின் போதே ‘ஆஷ்’ நீ போ’ என்று அஸ்வின் மீது நம்பிக்கை வைத்து இறக்கி விட்டவர்.

இந்நிலையில் அஸ்வினின் மன உறுதி பற்றி ரவி சாஸ்திரி கிரிக் இன்போ தளத்துக்கு கூறியதாவது:

அஸ்வின் தன் வலைப்பயிற்சி ஆட்டத்தை உண்மையான ஆட்டத்தில் கொண்டு வந்தார். அவரது ஷாட் செலக்‌ஷன், எந்த பவுலரை அடிப்பது என்ற தேர்வு இவையெல்லாம் துல்லியம். ஸ்பின்னர்களை அடித்து நொறுக்கினார், இதில் சந்தேகமேயில்லை. மொயீன் அலி அஸ்வின் ஓவரை அடித்து நொறுக்கி 14-15 ரன்களை விளாசினார், நிச்சயம் அஸ்வின் அவரை சும்மா விட மாட்டார் என்று தெரியும். அதனால் அவர் பந்தை அடித்து நொறுக்குவார் என்பது எனக்குத் தெரியும்.

அஸ்வின் சாதாரணப்பட்டவர் அல்ல, அவர் 5 டெஸ்ட் சதங்களை அடித்தவர் என்பதை மறந்து விடாதீர்கள். டைமிங்கில் கில்லாடி. ஆட்டம் ஒரு கட்டத்தில் கொஞ்சம் நெருக்கடியாகத்தான் இருந்தது, ஆனால் அஸ்வின் இறங்கி சிஎஸ்கேவை விளாசித்தள்ளி விட்டார்.இந்த சீசன் அவருக்கு ஆச்சரியகரமான ஒரு சீசன்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இன்னொரு வாழ்க்கை அவருக்குக் கிடைத்திருக்கிறது. செஹலும் அவருடன் வீசுகிறார். அங்கிள் அஸ்வின் நலல் மனநிலையில் இருக்கிறார்.

ஆஷ் (அஸ்வின்) இடம் தன் திறமைகள் மீதான அசாத்திய நம்பிக்கை உள்ளது. சில வேளைகளில் அதை களத்தில் செயல்படுத்துவதில்தான் கொஞ்சம் கஷ்டம். ஆனால் சிஎஸ்கேவுக்கு எதிராக தான் என்ன செய்ய வேண்டும் என்பதையும் தான் என்ன செய்கிறோம் என்பதையும் தெரிந்தேதான் செய்தார். டார்கெட் என்னவென்று தெரியும் எப்போது சிக்ஸ் அடிக்க வேண்டும் என்று தெரிண்டு வைத்துள்ளார்.

எந்த பவுலரை விளாசலாம் என்பதை தேர்வு செய்து பிரமாதமாக ஆடினார் அஸ்வின்.

இவ்வாறு கூறினார் ரவி சாஸ்திரி.

Comments

Popular posts from this blog