அமைச்சராகும் உதயநிதி? தொடங்கியது ஆரம்பக் கட்ட பணிகள்!
- Get link
- X
- Other Apps
அமைச்சராகும் உதயநிதி? தொடங்கியது ஆரம்பக் கட்ட பணிகள்!
முதல்முறையாக ஆட்சிப் பொறுப்பை ஏற்றுள்ள ஸ்டாலின் எந்தவிதமான விமர்சனமும், எந்த பகுதியில் இருந்தும், தன் மீது வந்து விடக் கூடாது என்பதில் கவனமாக இருக்கிறார். எனவே, வாரிசு அரசியல் விமர்சனங்கள் கடுமையான எழுந்து விடும் என்பதை காரணம் காட்டி தனது குடும்பத்தினரை ஆஃப் செய்து வைத்திருந்தார் ஸ்டாலின்.
இதனிடையே, ஆட்சியமைத்து ஓராண்டு கடந்து விட்ட நிலையில், உதயநிக்கு அமைச்சர் பதவி கொடுக்க வேண்டும் என குடும்பத்திலிருந்து மீண்டும் அழுத்தங்கள் வரத் தொடங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஸ்டாலினின் வீட்டுக்குள் மட்டுமே பேசப்பட்டு வந்த இந்த விஷயங்கள் தற்போது பொதுவெளியில் பேசப்பட்டு வருகிறது. அதனை முதன்முதலாக கொளுத்திப் போட்டவர் பள்ளி கல்வித்துறை அமைச்சரும், உதயநிதியின் ஆருயிர் நண்பருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி.
“உதயநிதி ஸ்டாலின் தமிழ்நாட்டின் அமைச்சராக வர வேண்டும். இது எனது விருப்பம் மட்டுமல்ல. பலரது விருப்பம் இதுதான். மக்களுக்காக உழைக்கும் உதயநிதியின் திறமை ஒரு தொகுதியுடன் மட்டும் சுருங்கி விடக்கூடாது” என்றும் அன்பில் மகேஷ் தெரிவித்தார்.
ரேஷன் கடைகளில் விரைவில் புதிய நடைமுறை: அமைச்சர் அறிவிப்பு!
இந்த நிலையில், உதயநிதியை அமைச்சராக்கும் முறைப்படியான அடுத்தக்கட்ட நடவடிக்கையை அன்பில் மகேஷ் பொய்யாமொழி தொடங்கியுள்ளார். திருச்சி தெற்கு மாவட்டக் கழகச் செயற்குழுக் கூட்டம், திருச்சி தெற்கு மாவட்டக் கழக அலுவலகத்தில் நடைபெற்றது. தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சரும், தெற்கு மாவட்ட கழக பொறுப்பாளருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில், ஜூன் 3ஆம் தேதி கலைஞரின் 99ஆவது பிறந்த நாள் விழாவை சிறப்பாக மாவட்ட அலுவலகத்தில் கழகக்கொடி ஏற்றி நலத்திட்ட உதவிகள் வழங்கி கொண்டாடுவது, கழக ஆக்கப்பணிகள் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.
இக்கூட்டத்தில் சிறப்பு தீர்மானமாக திமுக எம்.எல்.ஏ.வும், திமுக இளைஞர் அணி மாநில செயலாளருமான உதயநிதி ஸ்டாலினை அமைச்சராக்க வேண்டுமென ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதுபோன்று அடுத்தடுத்த மாவட்டங்களிலும் உதயநிதியை அமைச்சராக்க வேண்டுமென தீர்மானங்கள் நிறைவேற்றப்படலாம் என்று திமுக வட்டாரங்கள் கூறுகின்றன.
- Get link
- X
- Other Apps
Comments
Post a Comment