அயலான் குழந்தைகளுக்கு ரொம்ப பிடிக்கும்... நடிகர் சிவகார்த்திகேயன் உறுதி!


அயலான் குழந்தைகளுக்கு ரொம்ப பிடிக்கும்... நடிகர் சிவகார்த்திகேயன் உறுதி!


நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாகும் திரைப்படங்கள் அனைத்தும் பாக்ஸ் ஆபீஸில் செம கல்லா கட்டி வருகிறது . மிக சாதாரண குடும்பத்தில் இருந்து வந்து இப்பொழுது தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக உயர்ந்துள்ள சிவகார்த்திகேயனுக்கு தமிழில் மட்டுமல்லாமல் மற்ற மொழிகளிலும் மிகப்பெரிய ரசிகர்கள் பட்டாளம் உள்ளது. ரஜினி,விஜய் ஃபார்முலாவில் பின்தொடரும் சிவகார்த்திகேயன் தன்னுடைய படங்களில் ஹீரோயிஷத்தையும் தாண்டி காமெடியும் செய்து வருவதால் இவரின் படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் மட்டுமல்லாமல் குழந்தைகள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு இருந்து வருகிறது. குறிப்பாக வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன், ரெமோ உள்ளிட்ட திரைப்படங்கள் குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த படங்களாக இருந்து வருகிறது

அனைவரும் நம்ம வீட்டு பிள்ளை என கொண்டாடப்படும் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான சமீபத்திய திரைப்படங்கள் அனைத்தும் பக்கா மாஸ் என்டர்டைன்மென்ட் படங்களாக வெளியாகி வருகிறது மேலும் தன்னுடைய ஒவ்வொரு படங்களிலும் சமூக கருத்துக்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து வரும் சிவகார்த்திகேயன் நடிப்பில் சமீபத்தில் வெளியான டான் முழுக்க முழுக்க கல்லூரி கதைகளத்தில் எடுக்கப்பட்டு வெளியானது. ஒருபுறம் கலகலப்பான கல்லூரி வாழ்க்கையை அப்படியே கண்முன் கொண்டுவந்து காட்டி இருந்தாலும் மறுபுறம் தந்தைக்கும் மகனுக்கும் இடையே உள்ள உணர்வு பூர்வமான பாசத்தை மிகவும் தத்துரூபமாக காட்டி அனைவரையும் கண்கலங்க வைத்திருப்பார்கள். டான் 100 கோடியை கடந்து வசூல் சாதனை செய்து வருகிறது

இன்று நேற்று நாளை என்ற டைம் ட்ராவல் படத்தை இயக்கிய இயக்குனர் ரவிக்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள திரைப்படம் அயலான் முற்றிலும் சயின்டிஃபிக் கதை களத்தில் வித்தியாசமான டெக்னாலஜி பயன்படுத்தி உருவாகியுள்ளது.

இந்த படத்தில் ஏலியன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளதாக கூறப்படுகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து கிராஃபிக்ஸ் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று கொண்டுள்ளது. இந்த நிலையில் தனியார் யூடியூப் சேனல் நேர்காணலில் பேசிய சிவகார்த்திகேயன் அயலான் குழந்தைகளுக்கு ரொம்ப பிடிக்கும் அதில் இன்ட்ரஸ்டிங்கான பல விஷயங்கள் உள்ளன அது தமிழ் சினிமாவுக்கு மிகவும் புதிதாகவும் குறிப்பாக குழந்தைகளை கவரும் வகையிலும் இருக்கும் என சிவகார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.

Comments

Popular posts from this blog

DIY Evergreen Gnome bull Holly Grace

Jugoslawischer Apfelkuchen