அஜித் எல்லோரும் கிண்டல் பண்ணுவாங்களான்னு ரொம்ப ஃபீல் பண்ணாரு... இயக்குநர் கே எஸ் ரவிக்குமார்!


அஜித் எல்லோரும் கிண்டல் பண்ணுவாங்களான்னு ரொம்ப ஃபீல் பண்ணாரு... இயக்குநர் கே எஸ் ரவிக்குமார்!


நடிகர் அஜித் குமார் நடிப்பில் வினோத் இயக்கத்தில் உருவாகி வந்த வலிமை சுமார் இரண்டரை ஆண்டுகளாக உருவாக்கப்பட்டு வந்தது. தயாரிப்பாளர் போனி கபூர் தயாரிப்பில் மிக பிரம்மாண்டமான பொருட்செலவில் இந்தியா முழுவதும் பல்வேறு முக்கிய இடங்களில் நடைபெற்று வந்த இந்த திரைப்படத்திற்காக ரசிகர்கள் காத்துக் கொண்டிருந்தனர் இந்த நிலையில் பெரும் எதிர்பார்ப்புக்கு பிறகு பிப்ரவரி 24ஆம் தேதி வலிமை வெளியானது. அஜித் இதுவரை நடித்திராத அளவிற்கு முழுக்க முழுக்க ஆக்ஷன் கதை களத்தில் வெளியான இந்த திரைப்படம் ஹாலிவுட் படங்களுக்கு இணையான ஸ்டண்ட் காட்சிகள் பிரமிக்க வைக்கும் பைக் ரேஸிங் காட்சிகள் என பிரமாதப்படுத்தி இருந்தனர்.

ஆக்சன் காட்சிகள் மிகவும் சிறப்பாக வந்திருந்தாலும் கதை ஓட்டம் எதிர்பார்த்தது போல இல்லாததால் ரசிகர்களை இந்த படம் பெரிதாக கவரவில்லை கலவையான விமர்சனங்களை பெற்று வலிமை பாக்ஸ் ஆபீஸில் தோல்வியை சந்தித்தது. இந்த நிலையில் அஜித்,வினோத் கூட்டணி மீண்டும் அடுத்த படத்தில் இணைய உள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு இன்னும் சில மாதங்களில் தொடங்கப்பட உள்ளது எனவும் கூறப்பட்டுள்ளது . Ajith62வது படத்தை இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கி இயக்க உள்ளதும் உறுதியாகியுள்ளது

ஒவ்வொரு படங்களிலும் வித்தியாசமான ரோல்களை தேர்ந்தெடுத்து நடிக்க வேண்டும் என்பதில் ஆர்வம் கொண்ட அஜித். கேஎஸ் ரவிக்குமார் இயக்கி அஜித் நடித்த திரைப்படம் வரலாறு . 2006ஆம் ஆண்டு வெளியான இந்தப் படத்தில் அஜித் மூன்று வேடங்களில் நடித்து கலக்கி இருப்பார். இதில் அப்பாவின் கதாபாத்திரம் பெண்மைப் போல நளினம் கொண்ட பரதநாட்டிய கலைஞராக அஜித் தத்ரூபமாக நடித்து இருப்பார். முதலில் காட்பாதர் என்ற பெயரில் உருவாகி வந்த இந்த படத்திற்கு பிறகு வரலாறு என டைட்டில் மாற்றப்பட்டு வரலாறு காணாத மிகப் பெரிய வெற்றிப் படமாக இப்படம் அமைந்தது.

இந்த நிலையில் சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் பேசிய கேஎஸ் ரவிக்குமார் அஜித் வரலாறு படத்தில் பெண்மை போல நளினம் கொண்ட பரதநாட்டிய கலைஞராக நடிப்பதால் தன்னை எல்லாரும் கிண்டல் பண்ணுவாங்களா என ரொம்ப ஃபீல் பண்ணி என்னிடம் கேட்டார். நான் அப்படியெல்லாம் எதுவும் இருக்காது இந்த ரோல் உங்க ரசிகர்களுக்கு ரொம்பவே பிடிக்கும் என கூறினேன் அதேபோல இந்த கதாபாத்திரத்தை ரசிகர்கள் கொண்டாடினார்கள் என கேஎஸ் ரவிக்குமார் கூறியுள்ளார்.

Comments

Popular posts from this blog

Microwave Peanut Brittle