டிம் டேவிட் அவுட்டை ரிவியூ செய்யாமல் பிளே ஆஃப் வாய்ப்பை இழந்தாலும் பண்ட் தான் சிறந்த கேப்டனாம்


டிம் டேவிட் அவுட்டை ரிவியூ செய்யாமல் பிளே ஆஃப் வாய்ப்பை இழந்தாலும் பண்ட் தான் சிறந்த கேப்டனாம்


டெல்லி மும்பை அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் 2022 போட்டியில் 10 பந்துகளில் மேட்சையே மும்பை வெற்றியாக மாற்ற உதவிய டிம் டேவிட் டக்கில் இருந்த போது எட்ஜ் ஆனது கூட தெரியாமல் ரிவியூ செய்யாமல் விட்ட டெல்லி கேப்டன் ரிஷப் பண்ட் இன்னும் சிறந்த கேப்டன் தான் என்கிறார் பிடிவாத ரிக்கி பாண்டிங்.

ரிவியூ கேட்காதது மட்டுமல்ல, உத்தி ரீதியாகவும் கேப்டன்சி ரிஷப் பண்ட்டுக்கு வரவில்லை. நிறைய தப்புத் தப்பாக ஓவர்களை கொடுக்கிறார், மும்பை மேட்சின் போது அது ஒரு குழிப்பிட்ச் ஓப்பனிங்கே ரோஹித் ஸ்பின்னரை கொண்டு வந்ததைப் பார்க்கிறார், ஆனாலும் நார்ட்யேவிடம் கொடுக்கிறா, அவர் 15 ரன்களைக் கொடுக்கிறார், இப்படியாக உத்தி ரீதியாக மாபெரும் தவறுகளை இந்த ஐபிஎல் முழுதும் செய்தவர்.

அதே போல் வயதான தோனி கிரீசில் இருக்கும்போது கடந்த ஐபிஎல் தொடரில் ரபாடாவிடம் ஓவர் இருக்க ஆவேஷ் கானிடம் கொடுக்க அவர் புல்டாசாக வீச தோனி போட்டியை வென்றார். இப்படி சொல்லிக்கொண்டே போகலாம், ரிஷப் பண்ட் கேப்டன்சிக்கு லாயக்கற்றவர் அல்லது அவர் இப்போதைக்கு அந்த புத்திசாலித்தனம் தேவைப்படும் பணிக்கு அவர் தயாராக இல்லை என்று கூறலாம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

ஆனால் டெல்லி கேப்பிடல்ஸ் பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங் இதை ஏற்றுக் கொள்ள மாட்டார், அவர் கூறும்போது, “தனது தவறு காரணமாக அணிக்கு பிளே-ஆஃப் சுற்றில் இடம் கிடைக்கவில்லை என ரிஷப் உணர்கிறார். அவர் இன்னும் இளமையாக இருக்கிறார். கேப்டன்ஷிப் பற்றி நிறைய கற்றுக்கொள்கிறார்.

அவர் ஒரு சிறந்த கேப்டன், அவர் தனது அணியை எப்படி வழி நடத்துகிறார் என்பதை கடந்த சீசனில் நாங்கள் பார்த்தோம். சில நேரங்களில் ஆட்டத்தின் போக்கு நம் வழியில் செல்லாது.” என்கிறார் ரிக்கி பாண்டிங்.

ஆனால் நம் பாயிண்ட் என்னவெனில் ஆட்டத்தின் போக்கு நம் வழிக்குச் செல்லாத போது அதை நம் வழிக்குத்திருப்புபவர் தானே கேப்டன், இந்தத் திறமை ரிஷப் பண்ட்டிடம் இருக்கிறதா என்று பாண்ட்டிங்கிடம் யாராவது கேட்டால் பரவாயில்லை.

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக டெஸ்ட் போட்டிகளில் வெளுத்து வாங்கி வெற்றி பெறச் செய்த ரிஷப் பண்ட்டின் தன்னம்பிக்கையை காலி செய்யும் முயற்சியோ இது என்ற சந்தேகம் கூட எழுகிறது.

Comments

Popular posts from this blog