#Breaking:ஹெல்மெட் அணியவில்லை:ஒரே நாளில் இத்தனை பேர் மீது வழக்கு பதிவு;அபராதம் – போக்குவரத்து காவல்துறை!


#Breaking:ஹெல்மெட் அணியவில்லை:ஒரே நாளில் இத்தனை பேர் மீது வழக்கு பதிவு;அபராதம் – போக்குவரத்து காவல்துறை!


இருசக்கர வாகன விபத்துகளைக் கட்டுப்படுத்த மற்றும் குறைக்கும் நோக்கில் சென்னையில் இன்று (மே 23 ஆம் தேதி) முதல் இருசக்கர வாகனங்களில் பின்னால் அமர்ந்து செல்பவர்களுக்கும் ஹெல்மெட் கட்டாயம் என்று சென்னை போக்குவரத்து காவல்துறை ஏற்கனவே தெரிவித்திருந்தது.மேலும்,இருசக்கர வாகனங்கள் ஓட்டிச்செல்பவர்களும், பின்னால் அமர்ந்து செல்பவர்களும் ஹெல்மெட் அணியாமல் சென்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் காவல்துறை எச்சரிக்கை விடுத்தது.

அதன்படி,சென்னையில் இன்று முதல் ஹெல்மெட் அணியாதவர்களை பிடிக்க 312 இடங்களில் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். இந்நிலையில்,சென்னையில் பின் இருக்கையில் அமர்ந்து ஹெல்மெட் அணியாமல் சென்ற 367 பேர் மீது போக்குவரத்து போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

அதைப்போல,ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டியதாக இன்று மட்டும் 1278 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டள்ளதாகவும் சென்னை போக்குவரத்து போலீசார் தெரிவித்துள்ளனர்.இதனையடுத்து,ஹெல்மெட் அணியாமல் சென்றவர்களிடம் போக்குவரத்து போலீசார் ரூ.100 அபராதம் விதித்து நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

Comments

Popular posts from this blog