இலங்கைக்கு 2வது கட்டமாக தமிழ்நாட்டில் இருந்து நிவாரண பொருட்கள் அனுப்பி வைப்பு1610906563
- Get link
- X
- Other Apps
இலங்கைக்கு 2வது கட்டமாக தமிழ்நாட்டில் இருந்து நிவாரண பொருட்கள் அனுப்பி வைப்பு
இலங்கைக்கு 2வது கட்டமாக தமிழ்நாட்டில் இருந்து கப்பலில் நிவாரணப் பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டன.இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியால் அந்நாட்டு மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் இலங்கை மக்களுக்கு உதவும் வகையில் தமிழக அரசு சார்பில் அத்தியாவசிய பொருட்கள், மருந்து பொருட்கள் உள்ளிட்டவை தமிழகத்தில் இருந்து அனுப்பி வைக்கப்படும் என சட்டசபையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். அதன்படி சென்னையில் இருந்து கடந்த மாதம் கப்பல் மூலம் . முதற்கட்டமாக 9,500 டன் அரிசி, 200 டன் பால் பவுடர், 30 டன் மருந்து பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டது
இதன் தொடர்ச்சியாக இரண்டவது கட்டமாக பொருட்கள் தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகம் வழியாக இலங்கைக்கு அனுப்பி வைக்கப்படும என அறிவிக்கப்பட்டு இருந்தது.
அதன்படி இன்று தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகத்தில் இருந்து கொழும்பு துறைமுகத்துக்கு புறப்பட்டு செல்கிறது. இந்த கப்பலில் 14 ஆயிரத்து 700 டன் அரிசி, 250 டன் பால் பவுடர், 50 டன் மருந்து பொருட்கள் ஏற்றப்பட்டு தயார் நிலையில் உள்ளது. மொத்தம் 15 ஆயிரம் டன் நிவாரண பொருட்களுடன் தூத்துக்குடி துறைமுகத்தில் இருந்து இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இந்த கப்பலை அமைச்சர்கள் செஞ்சி கே.எஸ்.மஸ்தான், கீதாஜீவன், அனிதா ராதாகிருஷ்ணன் ஆகியோர் இன்று கொடியசைத்து அனுப்பி வைத்தனர் ..
இதனை தொடர்ந்து மீதமுள்ள அரிசி உள்ளிட்ட இதர பொருட்கள் அடுத்த சில தினங்களில் மற்றொரு கப்பல் மூலம் தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்கு அனுப்பி வைக்கப்படும், என அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.
- Get link
- X
- Other Apps
Comments
Post a Comment