TNPSC குரூப் 2 & 2A தேர்வு முடிவுகளை எப்படி தெரிந்துகொள்ளலாம்? வழிமுறைகள் இதோ!443512017


TNPSC குரூப் 2 & 2A தேர்வு முடிவுகளை எப்படி தெரிந்துகொள்ளலாம்? வழிமுறைகள் இதோ!


TNPSC குரூப் 2 & 2A தேர்வு முடிவுகளை எப்படி தெரிந்துகொள்ளலாம்? வழிமுறைகள் இதோ!

தமிழக அரசுப் பணியாளர் தேர்வாணையம் கடந்த மே 21ம் தேதி குரூப் 2&2A தேர்வுகளை நடத்தியிருந்தது. இந்த நிலையில் தேர்வு முடிவுகள் எப்போது வெளியிடப்படும் என அனைவரும் எதிர்பார்த்த நிலையில் தற்போது TNPSC முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

TNPSC குரூப் 2&2A தேர்வு:

தமிழகத்தில், அரசு அலுவலகங்களில் காலியாக உள்ள 5529 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்காக கடந்த மே 21ம் தேதி TNPSC குரூப் 2&2A தேர்வு நடத்தப்பட்டது. தமிழகம் முழுவதும் சுமார் 13 லட்சம் பேர் தேர்வுக்கு விண்ணப்பித்திருந்த நிலையில் 11 லட்சம் பேர் மட்டுமே தேர்வு எழுதினர். TNPSC குரூப் 2 மற்றும் 2A தேர்வு எழுதிய சுமார் 11 லட்ச விண்ணப்பதாரர்களும் தேர்வு முடிவுகளை எதிர்பார்த்து இருக்கும் நிலையில் ஜூன் மாதம் தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என்று தேர்வு வாரியம் தெரிவித்திருந்தது.

இதற்கிடையில் ஜூலை மாதம் தொடங்கிய பிறகும் இன்னும் TNPSC குரூப் 2&2A தேர்வு முடிவுகள் வெளியிடப்படவில்லை. மேலும் தேர்வு எழுதிய 11 லட்சம் பேரும் மெயின் தேர்வுக்கு தயாராவதற்கு எவ்வளவு கட் ஆஃப் மதிப்பெண்கள் தேவை என்பதையும் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். அத்துடன் TNPSC குரூப் 2&2A தேர்வுக்கான மெயின் தேர்வு செப்டம்பர் மாதம் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இதற்கான கலந்தாய்வு மற்றும் நேர்காணல் டிசம்பர் 2022 முதல் ஜனவரி 2023 க்குள் நடத்தப்படும் என்று தேர்வு வாரியம் தெரிவித்திருந்தது. தற்போது TNPSC குரூப் 2&2A தேர்வுக்கான கட் ஆப் மார்க் வெளியிடப்பட்டுள்ளது. இதில் பொது பிரிவினரில் ஆண்களுக்கு 158-163, பெண்களுக்கு 155-160 என்றும், SC (A),ST பிரிவினரில், ஆண்களுக்கு 145-150, பெண்களுக்கு 138-143 என்றும் தேர்வு வாரியம் நிர்ணயித்துள்ளது.

TNPSC குரூப் 2 ப்ரீலிம்ஸ் 2022 இல் தேர்வான விண்ணப்பதாரர்கள் பின்வரும் படிகள் மூலம் முடிவுகளை தெரிந்து கொள்ளலாம்.

  1. TNPSC குரூப் 2 தேர்வு முடிவு 2022 ஐப் பதிவிறக்க, TNPSC இன் அதிகாரப்பூர்வ இணையதளமான https://tnpsc.gov.in/ ஐப் பார்வையிடவும்.
  2. முக்கியமான இணைப்புகள் பிரிவின் கீழ் “latest results/Result declaration schedule” என்பதைக் கிளிக் செய்யவும்.
  3. TNPSC முடிவுகள் குறித்த பல்வேறு அறிவிப்புகள் கிடைக்கும் பக்கத்திற்கு நீங்கள் அனுப்பப்படுவீர்கள்.
  4. அதில், 21.05.2022 அன்று நடைபெற்ற முதல்நிலைத் தேர்வுக்கான TNPSC குரூப் 2 முடிவு 2022 தேடவும்.
  5. TNPSC Group 2 Result 2022 -க்கான இணைப்பைக் கிளிக் செய்து உங்கள் உள்நுழைவு விவரங்களைச்சமர்ப்பிக்கவும்.
  6. சமர்ப்பி என்பதைக் கிளிக் செய்த பிறகு, உங்கள் TNPSC குரூப் 2 பிரிலிம்ஸ் தேர்வு முடிவுகள் திரையில் கிடைக்கும். TNPSC குரூப் 2 முதன்மைத் தேர்வுக்கான உங்கள் தகுதி நிலையைப் பதிவிறக்கி சரிபார்க்கவும்.

Comments

Popular posts from this blog

Genius Elf on the Shelf idea to get your kids to donate their toys

PAVILIA Plush Sherpa Blanket Throw #Plush