செஸ் ஒலிம்பியாட் போட்டி நிறைவு! சென்னையில் இன்று கோலாகல விழா ஏற்பாடு!83458111
- Get link
- X
- Other Apps
செஸ் ஒலிம்பியாட் போட்டி நிறைவு! சென்னையில் இன்று கோலாகல விழா ஏற்பாடு!
44வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி சென்னையைடுத்த sஎங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில் கடந்த 28ம் தேதி தொடங்கியது. இதன் தொடக்க விழா சென்னை நேரு உள்விளையாட்டரங்கில் உலக நாடுகள் வியக்கும் வகையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இதில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில், பிரதமர் மோடி கலந்து கொண்டு செஸ் ஒலிம்பியாட் போட்டிகளை தொடங்கி வைத்தார். இதில் அனைத்து நாட்டு வீரர் விராங்களைகளை கலந்துகொண்டனர்.
இதனை தொடர்ந்து கடந்த 12 நாட்களாக நடந்து வரும் சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி இன்றுடன் நிறைவடைகிறது. iதன் நிறைவு விழாவும் சென்னை பெரிய மேட்டில் அமைந்துள்ள நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற உள்ளது. முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் இவ்விழாவில் நமது கூல் கேப்டன் தோனி சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு விருதாளர்களுக்கு பதக்கங்களை வழங்க உள்ளதால் ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர். இந்நிலையில் இன்று மாலை 5.30 மணியளவில் நடைபெற உள்ள இவ்விழாவையடுத்து விழாவுக்கான முன்னேற்பாடுகள் மற்றும் பாதுகாப்பு பணிகள் நடைபெற்ற வருகிறது.
மேலும் தமிழக அரசு சார்பில் 1,000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். செஸ் ஒலிம்பியாட் போட்டியின் தொடக்க விழாவில் கண்கவர் நிகழ்ச்சிகள் இடம்பெற்றது போல நிறைவு விழாவும் மிகவும் பிரமாண்டமாக நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. நிறைவு விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பதக்கங்களை வழங்க உள்ளார். இவ்விழாவுக்கு விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் மெய்யநாதன், சர்வதேச சதுரங்க கூட்டமைப்பு தலைவர் அர்கடி துவார்கோவிச் ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர். பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் செஸ் ஒலிம்பியாட் போட்டி பிரமாண்டமான முறையில் நடைபெறும் என்பதில் சந்தேகமும் இல்லை.
- Get link
- X
- Other Apps
Comments
Post a Comment