அடி தூள்!! சிலிண்டர் அதிரடி விலைக்குறைப்பு!! வாடிக்கையாளர்கள் கொண்டாட்டம்!! இந்தியாவில் சமையல் எரிவாயு சிலிண்டர் விலைகளை எண்ணெய் நிறுவனங்கள் ஒவ்வொரு மாத தொடக்கத்திலும் நிர்ணயித்து வருகின்றன. சென்ற மாதத்தில் வீட்டு உபயோகத்திற்கான சிலிண்டர் விலை ரூ 50 உயர்த்தப்பட்டது. இந்த விலை உயர்வு இல்லத்தரசிகள், நடுத்தர வர்க்கத்தினரிடையே பெரும் கலக்கத்தையும், அதிருப்தியையும் ஏற்படுத்தியது. இன்று ஆகஸ்ட் முதல் தேதியை முன்னிட்டு சிலிண்டர் விலைகள் பரிசீலிக்கப்பட்டு அதன் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி சென்னையில் வணிக பயன்பாட்டிற்கான 19 கிலோ சமையல் எரிவாயு சிலிண்டர் விலை நேற்று வரை ரூ 2177.50 காசுகளுக்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது. இந்நிலையில், சென்னையில் வணிக பயன்பாட்டிற்கான சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை இன்று எண்ணெய் நிறுவனங்கள் சற்று குறைத்துள்ளதாக அறிவித்துள்ளன. அதன்படி, 19 கிலோ எடைகொண்ட சிலிண்டருக்கு ரூ36.50 காசுகள் குறைக்கப்பட்டுள்ளது. இதனால், சென்னையில் 19 கிலோ எடை கொண்ட வணிகபயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை ரூ2141க்கு விற்பனை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதேவேளை...