அமைச்சராகும் உதயநிதி? தொடங்கியது ஆரம்பக் கட்ட பணிகள்! முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு பொறுப்பேற்ற போதே, முதன்முறையாக எம்.எல்.ஏ.வான அவரது மகன் உதயநிதிக்கு அமைச்சர் பொறுப்பு வழங்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அமைச்சர் பட்டியலில் அவரது பெயர் இடம்பெறாமல் இருந்தது அவரது ஆதரவாளர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியது. முதல்முறையாக ஆட்சிப் பொறுப்பை ஏற்றுள்ள ஸ்டாலின் எந்தவிதமான விமர்சனமும், எந்த பகுதியில் இருந்தும், தன் மீது வந்து விடக் கூடாது என்பதில் கவனமாக இருக்கிறார். எனவே, வாரிசு அரசியல் விமர்சனங்கள் கடுமையான எழுந்து விடும் என்பதை காரணம் காட்டி தனது குடும்பத்தினரை ஆஃப் செய்து வைத்திருந்தார் ஸ்டாலின். இதனிடையே, ஆட்சியமைத்து ஓராண்டு கடந்து விட்ட நிலையில், உதயநிக்கு அமைச்சர் பதவி கொடுக்க வேண்டும் என குடும்பத்திலிருந்து மீண்டும் அழுத்தங்கள் வரத் தொடங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஸ்டாலினின் வீட்டுக்குள் மட்டுமே பேசப்பட்டு வந்த இந்த விஷயங்கள் தற்போது பொதுவெளியில் பேசப்பட்டு வருகிறது. அதனை முதன்முதலாக கொளுத்திப் போட்டவர் பள்ளி கல்வித்துறை அமைச்சரும், உதயநிதியின் ஆருயிர் நண்பர...